தமிழக அரசியலில் இன்னும் உறுதியான நிலைக்கு வராதவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டும்தான். கட்சி ஆரம்பிப்பாரா, ஆரம்பித்தாலும் அதில் உறுதியாக இருப்பாரா ,நிற்பாரா என்றெல்லாம் சந்தேகங்கள் எழத் தொடங்கி விட்டன.காரணம் அவரது உடல் நலம்.!
ஆனால் உலகநாயகன் கமல்ஹாசன் மட்டும் கட்சிக்குப் பெயர் வைத்துவிட்டதுடன் கூட்டணி பற்றி பேசுமளவுக்கு வளர்ந்து விட்டார்.
அண்மையில் ஒரு தொலைக்காட்சிக்காக பேசிய கமல் பகிரங்கமாக “காங்கிரசுடன் கூட்டணி வைப்பேன் ” என்பதாக சொல்லி இருக்கிறார். ஆனாலும் நெருடல்.!
“தி.மு.க., அ.தி.மு.க.ஆகிய கட்சிகளுடன் மக்கள் நீதி மையம் கூட்டணி அமைக்காது “என்பது மக்கள் நீதி மய்யம் கட்சியின் கொள்கை.
ஆனால் காங்.கட்சியின் மெயின் கூட்டணி கட்சியே தி.மு.க.தான். “இந்த கூட்டணி உடையும்”என்று கமல் நம்புகிறார். தமிழக அரசியலில் அப்படியொரு மாற்றம் நிகழுமா? தி.மு.க.வை விட்டு காங். வெளியில் வருமா?
கமலின் தீர்க்க தரிசனத்தில் நமக்கு நம்பிக்கை இல்லை.நாடாளு மன்றத் தேர்தலில் மய்யத்தின் பலம் காங்கிரஸ் கட்சிக்கு பெருமளவில் உதவாது. காங். கட்சியே அடுத்தவர் தோளை நம்பிக் கொண்டிருக்கிற கட்சி. ஆனால் முரண்பட்ட கூட்டணி முன்னர் நடந்திருக்கிறது. அதை மனதில் வைத்து கமல் சொல்லியிருக்கலாம். ஆனால் பகிரங்கமாக திமுக.வை எதிர்க்கப்போவதாக சொல்கிற ஒருவரை எப்படி இதர கூட்டணி கட்சிகள் சகித்துக் கொள்ளும்?













