ரஜினியைத் தொட்ட விஜய் பட வியாபாரம்!

தளபதி விஜய் நடித்திருக்கிற ‘சர்கார்’ படத்தின் விநியோக உரிமை சூப்பர் ஸ்டார் ரஜினியின் பட உயரத்தை தொட்டு விட்டது என்கிறார்கள்.
புள்ளி விவரங்கள் அதிகாரபூர்வமானவை இல்லை என்றாலும் பட வியாபாரம் சார்ந்த சில மீடியேட்டர்கள், விநியோகஸ்தர்கள் சொல்லிய தகவல்கள் தான். பெரும்பாலும் உண்மையின் பக்கமாக கணக்குகள் இருக்கும்.
பட உரிமைகள் பின்வரும் தொகைக்கு விற்கப் பட்டிருக்கலாம்.
சென்னை 9 கோடி, செங்கல்பட்டு,22 கோடி, வட,தென் ஆற்காடு 10 கோடி, மதுரை 9 கோடி,கோவை 14 .5 கோடி, சேலம் 7.25 கோடி,திருச்சி 8.50 கோடி, நெல்லை, குமரி 6.50 கோடி. இவை தவிர வெளிநாடு 23 கோடி. இந்தி 25, கர்நாடகம் 9 கோடி,கேரளம் 7 கோடி, ஆந்திரம் 6.50 .இப்படி 191.75 கோடிகள் வரை போயிருப்பதாக சொல்கிறார்கள். இதன் உச்சம் 200 வரை போக வாய்ப்பு இருப்பதாக சொல்கிறார்கள்.
சூப்பர் ஸ்டார் ரஜினி படங்களுக்கு மட்டுமே இத்தகைய அளவுக்கு மார்க்கெட் இருக்கிறது அதை தளபதி விஜய் தொட்டுவிடுவார் என்றே சொல்கிறார்கள். சன் நிறுவனத்தின் தயாரிப்பு என்பதால் இத்தகைய வாய்ப்பு என்பதுடன் ஏஆர் முருகதாசின் அரசியல் பேசுகிற படமாகவும், விஜய்யின் அரசியல் பிரவேசத்தை உறுதிபடுத்துகிற படமாகவும் இருக்கும் என்பதால் சகல கால்வாய்களிலும் வசூல் வெள்ளம் பாயக் கூடும்.