“மந்திரி அக்பர்ஜி! விட மாட்டேன்…! “பெண் பத்திரிகையாளர் சவால்.!

பத்திரிகையாளர், அரசியல்வாதி, மத்திய பிஜேபி மந்திரி  எம்.ஜே ,அக்பர் மீது பாலியல் பலாத்காரவாதி என்கிற முத்திரையை  பெண் பத்திரிகையாளர் பிரியாரமணி அழுத்தமாக குத்தி இருக்கிறார்.

வெளிநாட்டில் சுற்றுலாவில் இருந்த அக்பர் பாய்  பத்திரிகையாளர்  மீது  மான நட்ட வழக்கைத் தொடர்ந்து இருக்கிறார்.

ஆனால் குற்றச்சாட்டுப் பற்றி மந்திரிபாய் வாயைத் திறக்கவில்லை. “அரசியல் சூழ்ச்சி என சொல்லி அக்பர் தப்பிக்கப் பார்ப்பதை அனுமதிக்க மாட்டேன் பார்த்து விடுகிறேன்” என பிரியா ரமணி சவால் விட்டிருக்கிறார்.

தமிழகத்தில் சின்மயிக்குப் பின்பலம் பிஜேபி என்பதும்  விரைவில் தெரியவரும் என்கிறார்கள்.