“இன்னிக்கி மீ டூ வில் பெருசா எதுவும் மாட்டலியா?”
“சல்மான்கானை விட பெரிய ஆளு வேணுமா சார்?”
“அவர் பெரிய ஆளுதான். நான் கேட்டது சவுத் சைட் ல?”
“லட்சுமி மஞ்சு.மோகன்பாபுவின் பொண்ணு. நடிகை, ப்ரொட்யூசர் .முதல் கல்யாணம் பெயிலியர். ரெண்டாம் கல்யாணம் நடந்திருக்கு. இப்ப பிரஸ் பீப்பிளை சந்திச்சாங்க. நம்ம ஆளுங்களின் லேட்டஸ்ட் டிரன்ட் மீ டூ தானே? அதக் கேட்டாங்க. நீங்க மாட்டலியான்னு?”
“நான் சினிமா லைப்ல மாட்டல. பெர்சனல் லைப் ல மாட்டினேன்.அவ்வளவுதான்னு சொல்லிடாங்க. நாமும் அத அவ்வளவா கிண்டல. ”
“சரி வேற?”
“அனுஷ்கா லவ் ரூமருக்கு இன்னும் மூணு நாள்ல என்ட் கார்டு போட்ருவாங்க?”
“அவங்க அனவுன்ஸ் பண்ணப்போறாங்களா? கிரேட்”
“அவங்க இல்ல..அவரு !பிரபாஷ் !”
“ஓ..கிரேட் யா! அவரே லவ் மேரேஜ்ங்கிரத சொல்றது சூப்பர்தான்வே!”
“சார்.! பிரபாஷ் கல்யாணம் கட்டிக்கப் போறது ரிலேட்டிவ் பொண்ண. அக்டோபர் 23 அவரின் பெர்த் டே! அன்னிக்கித்தான் சொல்லப்போறார்னு சொல்ல வந்தேன்.”