“என்னை கெடுத்தான்” வரிசையில் எல்லாமே லாங் லாங் எகோ வில் கெடுக்கப்பட்டதாகவே இருக்கிறது. “மீ டூ “மேட்டர் எல்லாம் முதுகில அடிச்சான் பல்லு போச்சு என்கிற கதைதான்.!
லேட்டஸ்ட் விக்டிம் மிஸ்டர் சல்மான்கான்,! குற்றம் சுமத்தி இருப்பவர் பூஜா மிஸ்ரா.
சுல்தான் படப்பிடிப்பின் போது போதையை கொடுத்து கூட்டுக்களவாணித்தனம்’ பண்ணி’விட்டதாக சல்மான், மற்றும் சகோதரர் மீது குற்றம் சாட்டியிருக்கிறார். அடப்பாவிகளா?
பிஜேபி தலைவர் சத்ருகன் சின்காவும் தன்னை மிரட்டுவதாக சொல்கிற பூஜா தன்னுடைய லேப்டாப்.மொபைல் போன் ஆகியவைகளையும் சின்கா எடுத்துக் கொண்டிருப்பதாக சொல்கிறார்,
ஆனால் சல்மானின் ரசிகர்கள் “நீ சொல்வதெல்லாம் பொய்” என பூஜாவை ரகளை செய்கிறார்கள். தினமும் இப்படி ஒரு பஞ்சாயத்து வருவதால் தனியாக ஒரு இலாகாவை உருவாக்கிவிடலாம்.