தரை தட்டிய கப்பலைப் போல ‘தட்ஸ் மகாலட்சுமி’ படக்குழு தவிக்கிறது. “எந்த மொழியில் எடுத்தாலும் துட்டு பார்த்து விடலாம் “என்கிற நம்பிக்கையோடு இந்தியில் வந்த ‘குயீன்’ படம் தெலுங்கு பேசியது தட்ஸ் மகாலட்சுமியாக!.
அது ஜனித்த நேரம் கம்சன் பிறந்த நேரம் போலிருக்கிறது. கதாநாயகிக்கும் அதன் இயக்குநர் நீலகண்டாவுக்கும் ஆகவில்லை. டைரக்டரை கண்டம் -பண்ணிவிட்டார் தமன்னா.
“அந்தாளு டைரக்சன் னா நான் நடிக்கல ” என்று தமன்னா ஒரு பக்கம் கட்டையைப் போட்டால் மறுபக்கம் அணையே கட்டிவிட்டார் நீலகண்டா. “வேற ஆள பாருங்க!”
தமன்னாவுக்காக தம் கட்டிய தயாரிப்பாளர்” தூக்குடா நீல கண்டாவை!”என கர்ஜிக்க, வந்து மாட்டியவர் பிரசாந்த் வர்மா.
இரண்டு மாத இடைவெளிக்குப் பின்னர் ஷூட்டிங் ஆரம்பம்.
தற்போது படத்தின் முதல்போஸ்டர் வெளியாகி இருக்கிறது.
அதில் பழைய ,புதிய டைரக்டர் எவரது பெயரும் இல்லை.
“அந்த படத்தை நான் முழுவதுமாக சூட் பண்ணல.என் பேரை போடுறது ,துரோகம்” என்று பிரசாந்த் வர்மா கண்ணியமுடன் ஒதுங்கி விட்டார்.
ரிலீஸ் டைமில்தான் நீலகண்டா தடியை எடுப்பாரோ என்னவோ!
பெரிய இயக்குநரை தூக்கி அடித்த பெருமை தமன்னாவுக்கு!




