ஐயப்பன் கோவிலில் பெண்கள், சிவகுமார் கருத்து.!

“காலத் தொடுநிர் மூலம்படு மூவுலகும்–அங்கே கடவுள் மோனத் தொளியே தனியா யிலகும் –சிவன் கோலங்கண்டுன் கனல் செய்சினமும் விலகும்-கையை கொஞ்சித் தொடுவாய். ஆனந்தக் கூத்திடுவாய். அன்னை,அன்னை . ஆடுங்கூத்தை நாடச் செய்தா என்னை”” என ஊழிக்கூத்தில் மெய்மறப்பான் பாரதி.! பெண்ணை ,பெண்மையை முன்னிறுத்தியது தமிழ்ப்பண்பாடு.! ஆணும் பெண்ணும் சேர்ந்து திருப்பதி பழநி,திருவண்ணாமலை என இன்ன பிற மலைக் கோவில்களுக்குச்செல்கிறோம். வடக்கில் பனி லிங்க தரிசனம் செய்கிறோம். அங்கெல்லாம் கணவனுடன் செல்ல அனுமதிக்கும் சட்டம் ஐயப்பனை மட்டும் தரிசிக்க அனுமதி மறுப்பது ஏன்?
“எண்ணிய முடிதல் வேண்டும் நல்லவே எண்ணல் வேண்டும் “என்கிறான் பாரதி.
பாரதியை வழி மொழிகிறார் சிவகுமார்.
“நூறு வருடங்களுக்கு முன்னர் வரை சபரிமலை தற்போது உள்ளதை விட மேலும் அடர்ந்த வனப்பகுதியாக இருந்தது. சந்நிதானத்துக்கு செல்ல சரியான பாதை வசதி இல்லை. விலங்குகள் தாக்கும் அபாயம் அதிகமாயிருந்தது. எனவே ஆண்கள் மட்டும் கூட்டம் கூட்டமாக கோஷம் போட்டுக் கொண்டே சென்று வழிபட்டனர். பெண்களுடைய உதிர போக்கு மோப்ப சக்தி கொண்ட விலங்குகளை ஈர்க்கும் சக்தி கொண்டதால் அவர்களை . ஆண்கள் உடன் அழைத்து செல்வதில்லை. தற்போது காலம் நவீனமயமாகி விட்டது. பழைய காலத்து அச்சங்கள் இப்போது இல்லை. நீதிமன்றமும் அனுமதி வழங்கி விட்டது. இனியும் பெண்களை சந்நிதானத்துக்குள் வரவே கூடாது என்று தடுப்பது தவறு. விரத காலங்களை தவிர்த்து வேறு நாட்களில் பெண்களும் வந்து வழிபாடு செய்யுமாறு ஒரு ஏற்பாடும் உடன்பாடும் உருவாகவேண்டும்” என்கிறார்.
இன்று மாலை நாலரை மணிக்குக் கிடைத்த செய்தி,