பிக் பாஸ் யாஷிகா ஆனந்தும் ‘மீ டூ’ !

“அதோ அந்தப் பாவிப்பயலும் என் முந்தானையை அவிழ்க்கப் பார்த்தவன்தான்” என்று போகிற போக்கில் யாரையாவது கையைக் காட்டிவிட்டு போகிற விளம்பர புத்திதான் காணப்படுகிறது.
இதுவரை அவ்வளவாக படங்களில் நடித்திராதவர் யாசிகா ஆனந்த் .இருட்டு அறையில் முரட்டு குத்து, பிக்பாஸ் என இரண்டுதான் மக்களுக்குத் தெரியும்.
அவர் சொல்கிறார் தனக்கும் பாலியல் வம்பு நடந்ததுங்க என்று!
அப்படி எதுவும் நடந்திருந்தால் அது அண்மையில்தான் இருந்திருக்க வேண்டும்.
ஆக யாசிகா ஆனந்த் அந்த நரியை அடையாளம் காட்ட வேண்டும். எனக்கு எட்டு வயதில் நடந்தது என்றெல்லாம் சொல்லி தப்பிக்க பார்க்கக்கூடாது. கவலை வேண்டாம், துருவங்கள் 16,பாடம்,இ.அ.மு.குத்து, மணியார் குடும்பம் ,நோட்டா ஆகிய படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார்.ஆகவே திரை உலகைச்சேர்ந்த பிரபலங்கள் யாசிகாவிடம் உண்மையை கறந்து தமிழ்சினிமாவின் மானத்தைக் காப்பாற்றவேண்டும்.