
சர்கார் கதை காபி தான் என எழுத்தாளர் சங்கத்திலிருந்தே அறிக்கை அளித்திருந்தது தற்போது பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. அவர்கள் என் முழு கதையையே படிக்கவில்லை என பாக்யராஜ் மற்றும் எழுத்தாளர் சங்கம் மீது முருகதாஸ் தற்போது குற்றமச்சாட்டியுள்ளார்.
மேலும் பாக்யராஜ் எடுத்த சின்ன வீடு என்ற படத்தின் கதையும் அதற்கு முன்பே வந்த கோபுரங்கள் சாய்வதில்லை படத்தின் கதையும் ஒன்றுதான். உங்களுக்கு வந்தால் மட்டும் அது parallel thought, எனக்கு என்றால் காப்பி என்று சொல்வதா.
“நான் படத்தை கூட போட்டு காட்டுகிறேன் என கூறிவிட்டேன் ஆனால் அவர்கள் அதற்கும் தயாராக இல்லை. புகார் கொடுத்துள்ள வருண் என்பவர் 15 வருடங்களுக்கு முன்பே பாக்யராஜ் உடன் ஒரு சீரியலில் பணியாற்றியுள்ளாராம், அந்த நட்புக்காக பாக்யராஜ் இப்படி நடுநிலை இல்லாமல் நடந்து கொள்கிறார் என எனக்கு சந்தேகம் இருக்கிறது” என முருகதாஸ் கூறியுள்ளார்.












