சர்காருக்கே சவாலா? தமிழ் ராக்கர்சை பிடிப்போம்!-தயாரிப்பாளர் சங்கம் அதிரடி!!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் நவம்பர் 6-ஆம் தேதி நடிகர் விஜய் நடித்த சர்க்கார் திரைப்படம் தமிழ்நாட்டில் வெளியாக உள்ளது. அந்த திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துக்கள். மேலும் கடந்த 23-ஆம் தேதியன்று சென்னையில் நமது இரு அமைப்பினரும் கலந்தாலோசித்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி நவம்பர் 6-ஆம் தேதி முதல் வெளியாகும் திரைப்படங்களை திரையரங்கினுள் எவரேனும் வீடியோ கேமராவிலோ அல்லது மொபைல் போனில் படம் எடுக்கிறார்களா என்று ஒவ்வொரு திரையரங்கிலும் கண்காணிக்க அந்தந்த திரையரங்க உரிமையாளர்கள் ஆட்களை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று முடிவு செய்திருந்தோம். மேலும் அனைத்து திரையரங்குகளிலும் சி.சி.டிவி கேமரா பொருத்த வேண்டும் என்று முடிவு செய்திருந்தோம் .அதை தங்களுக்கு இக்கடிதத்தின் மூலம் நினைவூட்ட விரும்புகிறோம். ஆனால் தற்போது6- 11- 2018 அன்று சமூக வலைதளங்களில் தமிழ் ராக்கர்ஸ் என்ற நம் உழைப்பை சுரண்டும் திருடன், மேற்படி படம் வெளியான அன்று மாலையே, எச்.டி தரத்துடன் அவர்களது இணையதளத்தில் வெளியாகும் என சவால் விட்டுள்ளனர். இதற்கு நாம் அனைவரும் இணைந்து ஒன்றாக செயல்பட்டு மேற்படி தமிழ் ராக்கர்ஸ் என்ற திருடனை வெல்லவிடாமல், ஒவ்வொரு திரையரங்கிலும் கண்காணிப்பு ஆட்களை நியமித்து தீவிரமாக கண்காணித்து, அவர்களை பிடித்து உடனடியாக காவல் துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். மேலும் தங்களுடைய ஒத்துழைப்பை அளிக்க வேண்டுமாய் தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் இப்படிக்கு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.