ஏ.ஆர். முருகதாஸ் திடீர் முன்ஜாமீன் மனுத்தாக்கல்!

சர்கார் படவிவகாரம் தொடர்பாக நேற்று நள்ளிரவில் இயக்குனர் ஏ ஆர்.முருகதாஸ் கைது செய்யப்படவுள்ளதாக தகவல்கள் பரவியது.தொடரந்து அவரது வீட்டிற்கு போலீசார் சென்றதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் பாதுகாப்புக்கு சென்றதாகவே கூறினர். இதற்கிடையே சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன, இந்நிலையில் இன்று காலை இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இம் மனு மீதான விசாரணை இன்று பிற்பகலில் விசாரணைக்கு வருகிறது .