‘அரண்மனைக்கிளி,’ ‘எல்லாமே என் ராசாதான்’ ஆகிய படங்களை இயக்கிய ராஜ்கிரண்,அப்படங்களின் வெற்றிக்கு பின்னர், முழு நேர நடிகராக மாறினார்.நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வந்தார்..முதன்முதலில் தமிழ்சினிமாவில் 1 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய முதல் நாயகன் ராஜ்கிரண். ‘மாணிக்கம்’ படத்துக்காக அவருக்கு 1 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டது.தொடர்ந்து சில படங்களில் கதாநாயகனாக நடித்து வந்த ராஜ்கிரண் நந்தா படத்துக்கு பிறகு தனக்கு பொருத்தமான கேரக்டர்களை தேர்ந்த்டுத்து நடிக்கத தொடங்கினார்.இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப்பின் அதாவது சுமார் 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் ராஜ்கிரண் இயக்குனராக களமிறங்குகிறார்.பிரகாஷ்ராஜ் நடித்து வெற்றி பெற்ற ஒரு இந்திப் படத்தை தமிழில் தயாரித்து இயக்கும் உரிமையை ராஜ்கிரண் வாங்கியிருக்கிறார் என்கிறார்கள்.. இந்தி படத்தில் பிரகாஷ்ராஜ் நடித்த வேடத்தில், ராஜ்கிரண் நடிப்பதுடன், அந்த படத்தை இயக்கவும் செய்கிறாராம்