தமிழ் சினிமாவை மிரட்டிய தமிழ் ராக்கர்சை முடக்கும் வேலை தொடங்கியது!
தமிழ்சினிமாவுக்கு பெரும் சவாலாக இருப்பது தமிழ் ராக்கர்ஸ்இணையதளம். புதிய படங்களை திரையரங்குகளில் வெளியான அன்றே தங்களது இணையதளத்தில் வெளியிடும் சட்டவிரோத கும்பல் தான்அது.. அண்மையில் விஜயின் சர்கார் தீபாவளிக்கு வெளியானது.அப்படத்தை தீபாவளி அன்றே வெளியிடுவோம் என மிரட்டல் அறிவிப்பை வெளியிட்டது. அறிவிப்பு வெளியிட்ட மாதிரியே ஆன்லைனில் அப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சிகொடுத்தனர்.இந்நிலையில்,தற்போது ரஜினி நடிப்பில் வெளியாகவுள்ள 2.0 படத்தையும் படம் வெளியாகும் அன்று தங்களது இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த 2.0 . படக்குழு, தமிழ் ராக்கர்சை முடக்கும் வேலையை தற்போது TFPC ANTI PIRACY CELL மூலம், தொடங்கியுள்ளது.