“போதையில தள்ளாடுற சீன்.அப்படியே தத்ரூபமா வரணும். நிறை போதையில இருக்கிற ஆளு எப்படி இருக்கணுமோ ,அப்படி இருக்கனும்மா. நல்ல ரிகர்சல் பார்த்திட்டு போகலாம்.” என்று டைரக்டர் சீனை சொல்லிவிட்டார்.
நடிகை பிரியங்கா ஜவால்கர். படம் டாக்சி டிரைவர் , தெலுங்குப் படம்.
இந்த படம் ஹிட் ஆச்சுன்னா தெலுங்கு,தமிழ் ,மலையாளம் இப்படி பெரிய ரவுண்டு வரலாம் என மனக்கணக்குப் போட்ட பிரியங்கா புது வழியைக் கண்டு பிடித்தார், உதவியாளரை அழைத்தார்.
“போய் காஸ்ட்லியான ஓட்கா வாங்கிட்டு வா!”
ஆகா… குருவி என்னம்மா சிந்திக்கிது. சரி அதனால நமக்கென்ன கேட்டது. வேலை நடந்தால் சரி என்று வோட்காவை வாங்கிக் கொடுத்தனர்.
பழரசம் கலந்து குடித்தார் நடிகை, அப்புறம் என்ன ‘உன்னைக் கண் தேடுதே ‘லெவலுக்கு நடிப்பு உச்சம் தொட்டது. சில நாள் இரவுகளில் இந்த காட்சியைத்தான் படமாக்கி இருக்கிறார்கள்.
முதல் இரவு சீன் வைத்தால் என்ன நடந்திருக்கும் என்று வேறு வழியிலெல்லாம் சிந்திக்க வேண்டாம் நண்பர்களே!
இந்த படம் சென்னைக்கு வந்தா சொல்லுங்கப்பா.