ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு ரெட்டை தாப்பாள்னு சொல்வாங்க. தைலாபுரம் மருத்துவர் ஐயா பாட்டுக்கு ஒரு பூட்டே போதும்னு முடிவு பண்ணிட்டார் விஷால்.!
விஷாலின் அயோக்யா படத்தின் முதல் போஸ்டர் பாமக ஏரியாவில் சலசலப்பை ஏற்படுத்தியது. போலீஸ் ஜீப்பில் விஷால் கையில் பீர் பாட்டிலுடன் உட்கார்ந்து இருப்பது போல படம்.
சிகரெட் வைத்திருந்ததுக்கே தளபதி விஜய்க்கு ஐயா ராமதாஸ் அத்திமர ஆப்பு அடித்தவர் .பீர் பாட்டிலுக்கு சும்மா இருப்பாரா?
“இதுதான் விஷாலில் சமூக அக்கறையா? போஸ்டரை மாத்து” என்று பலத்த கண்டனத்தை தெரிவித்தார். ஆனால் அசையனுமே விஷால்?
“நானென்ன பீரை குடிக்கிற மாதிரியா போஸ் கொடுத்திருக்கேன்.இல்லியே! அதெல்லாம் மாத்த முடியாது”ன்னு சொல்லிட்டாப்ல.
பொட்டிய தூக்கணுமா?