‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ அடல்ட் காமடி படம்.
விமல் புழங்காத ஏரியா.
ஆனாலும் மனிதர் பட்டையைக் கிளப்பி இருக்கிறார்.
தென்னகத்து சன்னி லியோன் ஆன மியா லியோன் ,அஷ்னா சாவேரி, பூர்ணா, ஆனந்தராஜ் சிங்கம்புலி, மன்சூரலிகான் இன்னும் பலர் இருக்கிறார்கள்.
நேற்று படத்தின் பாடல் காட்சியும் முன்னோட்டமும் வெளியிட்டார்கள்.
கஜா புயலின் எதிரொலியாக சென்னை நகரம் குளிர்ந்து கிடந்தாலும் பிரசாத் லேப்புக்குள் அனல்.
மொத்தக் கூட்டமும் கண் இமைக்கவில்லை.!
இருட்டு அறையில் முரட்டுக்குத்துக்குப் பிறகு தியேட்டர் அதிபர்கள் இந்த படத்துக்குத்தான் முதல் உரிமை கொடுப்பார்கள்.
கிராமத்துப் பையன் மாதிரியான விமலை அழகிகள் மேய்ந்து தள்ளிவிட்டார்கள்.
நிகழ்ச்சியில் பேசியவர்கள் விமலுக்கு எங்கே மச்சம் கிடக்கு என்கிற ஆராய்ச்சியும் செய்யத்தவறவில்லை.
“பொம்பளைகள் எல்லாம் பெரிசு பெரிசா காட்டுராளுக,ஆம்பளைக என்னடா இத்துனூண்டு காட்டுறீங்க ” என்று ஆனந்தராஜ் பேசுற வசனத்துக்கு இயக்குநர் முகேஷ் என்ன சீன் வச்சிருக்கிறாரோ,? பெண்கள் கையில் சொலகையும் ஆண்கள் கையில் பேனாவையும் வைத்து சீன் காட்டியிருந்தால் சென்சார் என்ன செய்ய முடியும்?