நடிகர் விஜய்யின் 63வது திரைப்படத்தை அட்லி இயக்குகிறார். அட்லி தெறி, மெர்சல் என இரண்டு படங்களை இயக்கிய அட்லி மீண்டும்நடிகர் விஜய்யின் 63வது திரைப்படத்தை அட்லி இயக்குகிறார். இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கிறது. விஜய்யின் ஹீரோயினாக நடிக்க ‘எம்.எஸ்.தோனி’ பட புகழ் கியாரா அத்வானியிடம் பேச்சு வார்த்தை நடப்பதாக தகவல்வெளியான நிலையில் தற்போது, விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் படத்தில் விவேக், யோகி பாபு மற்றும் டேனியல் பாலாஜி முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளதாகவும் தெரிகிறது.இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். மெர்சல் ஜி.கே விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பு ரூபன் என அதே மெர்சல் கூட்டணி மறுபடியும் இணைந்திருக்கிறது.இப்படம் ஒரு ஸ்போர்ட்ஸ் த்ரில்லராக இருக்கலாம் என்கிறார்கள்.சர்கார் படத்திற்கு பிறகு விஜய் நடிக்கும் இப்படத்தை இயக்கும் அட்லி, அடுத்த ஆண்டு ஜனவரியில் படபிடிப்பைத் தொடங்கி தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.