மாட்டிக் கொள்ளாதவரை தேவதைதான். மாட்டிக்கொண்டால் வதைதான்.!கிழித்து தொங்க விட்டு விடுவார்கள் .
அப்படித்தான் ஆகி இருக்கிறது டான்ஸ் மாஸ்டர் காயத்ரிரகுராமின் கதையும்.!
போதையில் தாறுமாறாக சொகுசு காரை ஓட்டி வந்த அம்மணி போலீசில் மாட்டிக்கொண்டு அபராதம் செலுத்திய கதை நாட்டுக்கே தெரியும்.
ஆனால் “எனக்கு பிடிக்காத பத்திரிகைகள் கட்டி விட்ட கதை இது” என்று சொல்லி போதை மேட்டரை மறைக்கப்பார்த்தார்.
அவரது தோழி பிக்பாஸ் காஜலோ “இந்த சம்பவம் நடந்தபோது நானும் அங்குதானே இருந்தேன்.இஷ்டத்துக்கு அடிச்சி விடுறீங்க,டோன்ட் ஒர்ரி.ப்ரியா விடுங்க” என்கிறார்.
மேடம் எங்களுக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்.நீங்க எப்படி அங்கே?