கருவாடு விற்ற நடிகை. பட்டுக்கோட்டை பரிதாபம்.!இயக்குநர் வேதனை!

யானையின் பலத்துடன் டெல்டா மாவட்டங்களை நாசமாக்கி விட்டு கடந்து போய் எங்கேயோ கரைந்து விட்டது ‘கஜா புயல்.! உயர்ந்து நின்று தலையாட்டிய தென்னைகள் எல்லாம் வெட்டுப்பட்ட கட்டைகளாகிக் கிடக்கின்றன. அதை அகற்றுவதற்கு கூட காசில்லாமல் கையைப் பிசைந்து கொண்டிருக்கிறார்கள் விவசாயிகள். சீரும் செழிப்புமாக கிடந்த போது படமாக்கிய சீமைத்துரை படக்குழு வேதனைகளை பங்கிட்டுக் கொள்கிறது.