
“செட் லைட் எரியணும்னா என் பெட் ரூம் லைட்ட அணைக்கணும் “என்கிற நிலை இருப்பதாக சினிமாவைப் பற்றி பொதுவாக குற்றம் சாட்டுவது உண்டு.
காலம் காலமாக இருந்து வருகிற இந்த குற்றச்சாட்டு உண்மைதான் என்பதைப் போல சில நடிகைகள் புகார் கூற ஆரம்பித்தார்கள். ஹாலிவுட்டில் பற்ற வைத்த இந்த நெருப்பு இன்று மீ டூ வாக உருவாகிஇருக்கிறது..
குற்றச்சாட்டுகள்,மறுப்புகள் என மாறி மாறி அலங்கோலப்படுத்தி வருகிறது. இந்த நிலையில்தான் ஒரு பெண் காஸ்டிங் டைரக்டர் மோகன் என்பவர் மீது பாலியல் புகார் செய்திருக்கிறார்.
படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு வாங்கித் தருவதாக சொல்லி தனது சினேகிதியையும் இன்னும் சில பெண்களையும் கெடுத்து விட்டதாக சொல்லி சில வீடியோக்களை வெளியிட்டிருக்கிறார். விரைவில் போலீசில் புகார் செய்யப்போவதாகவும் சொல்லியிருக்கிறார்.
குற்றம் சாட்டப்பட்ட மோகன் என்பவரோ தனது அறையில் யாரோ சிலர் கேமராவை வைத்திருக்கிறார்கள் ,தனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்றும் சொல்லி இருக்கிறார். விசாரிக்கிறவர்கள் வந்து விசாரித்தால் உண்மை வெளிவரப்போகிறது.












