அய்யகோ அடுக்குமா இது ?
தமிழ்ச்சினிமாவில் செக்ஸியான நடிகைகள் இல்லையா?
பரிசுகளும் பாராட்டுகளும் பாலிவுட் பக்கம்தானா? கொடுமைங்க !
அடல்ட் காமடிப் படங்கள் எடுத்த அனுபவங்கள் இருந்தும் கோலிவுட்டுக்கு ஊக்கப் பரிசுகள் கூட இல்லேன்னா எப்படிங்க?
குமுறுகிறான்யா ரசிகன்!
ஆசியாவின் சிறந்த செக்ஸியான பெண்கள் என சொல்லி லண்டனை சேர்ந்த ‘ஈஸ்டர்ன் ஐ ‘என்கிற வார இதழ் ஐம்பது பேரை தேர்வு செய்திருக்கிறது.
அண்மையில் கல்யாணம் ஆகி கன்னி கழிந்த இரண்டு பாலிவுட் நடிகைகள்தான் முதலிரண்டு இடங்களைப் பிடித்திருக்கிறார்கள் .தீபிகா படுகோன் முதலிடம். பிரியங்கா சோப்ரா இரண்டாவது இடம்.
வயிற்றெரிச்சல் என்னன்னா ஐஸ்வர்யாராயை முப்பதாவது இடத்துக்கு தள்ளிட்டாங்க. முப்பத்தி ஒன்றுன்னு சொல்லி கோலிவுட்டுக்கு ஒரு கவுரவத்தைக் கொடுத்திருக்கலாம்ல.!
டி.வி.நடிகைகளுக்கு கூட பாராட்டு கிடைத்திருக்கிறது. இந்தி சீரியல் நடிகை நியா ஷர்மாவுக்கு மூணாவது இடம், பாகிஸ்தானை சேர்ந்த மகிராகான் நான்காம் இடம் என வரிசைப்படுத்தி இருக்கிறது அந்த வாரப்பத்திரிகை.
“தீபிகாவின் செயல்பாடுகள் சமூகத்துக்கு ஆரோக்கிய உணர்வை ஏற்படுத்தியதால் அவரை முதல் இடத்துக்கு தேர்வு செய்திருக்கிறார்கள்” என்பதாக சொல்லி இருக்கிறார் அந்த பத்திரிகையை சேர்ந்தவர். சமூகத்துக்கு அவர் செய்த நன்மைகள் என்ன என்பதையும் பட்டியல் போட்டிருக்கலாம்.