பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு நடிகர் விஜய் சேதுபதி பேசியதாவது: ‘பேட்ட’ படத்தில் ரஜினி சாருடன் நடிப்பது நிஜமா என்று நினைத்துப் பார்த்துக் கொள்கிறேன்.இவ்ளோ பெரிய மனிதனோடு நடிப்பேன் என்று. இது அவ்ளோ பெரிய விஷயம் எனக்கு. இவ்ளோ பெரிய மனிதனோடு நடிப்பேன் என்றுரஜினி சார், எதுக்கெடுத்தாலும் ஆண்டவன் ஆண்டவன்னு மேலே கையைக் காண்பிப்பார். என்னைப் பொறுத்தவரை, அந்த ஆண்டவனே ரஜினி சாரோட டெடிகேஷனைப் பாத்து வந்து, ரசிச்சு கை தட்டிட்டுப் போவான்.நேத்து வந்தவன் நான். எனக்கே சில சமயங்கள்ல இது போதும்னு நினைப்பு வருது. ஆனா இத்தனை படங்கள் பண்ணியும் கூட, இவ்ளோ உயரம் வந்த பிறகும் கூட, ஒவ்வொரு சீன்லயும் அத்தனை அட்டாச்மென்ட்டோட நடிக்கிறார் ரஜினி சார். ரஜினி சார் செய்றதெல்லாம் பெரிய ஒர்க்.கார்த்திக் சுப்பராஜ், சைலன்ட்டாவே இருப்பாரு. ஏதோ ஸ்கூல் படிக்கிற பையன்னு முதல்ல பாக்கும் போது நினைச்சேன். ஆனா அவரோட திறமையை பாத்து வியந்து போனேன்.ரஜினி சாரோட இந்த ‘பேட்ட’ படம் எப்படின்னா, செமயா, சும்மா ஸ்டைலா, கெத்தா, ஒரு கலாய்யா,பேட்ட இருக்கும். இந்தப் படத்துல நான் ரஜினி சாருக்கு நண்பனா, வில்லனான்னு கேக்கறீங்க. இவ்ளோ பெரிய சூப்பர் ஸ்டாருக்கு வில்லனா நடிச்சாத்தான் ஹிஸ்டரில நம்ம பேரும் இடம் பிடிக்கும். அதனால வில்லனாத்தான் நடிக்கிறேன்”.படத்தோட கடைசி ஃப்ரேம்ல கூட சர்ப்ரைஸ் வைச்சுக்கிட்டே இருக்கார் கார்த்திக் சுப்பராஜ்.இப்படியொரு அனுபவம் கிடைச்சதுக்கு நன்றி ரஜினி சார். இவ்வாறு விஜய் சேதுபதி பேசினார்.