
“ஏழு கூட்டங்களுக்கு வராதவருக்கு எதுக்கு பதவி ? உடனே விஷால் பதவி விலகனும். ஏழு கோடி ரூபாய் என்னாச்சு.சங்கத்துக்கென ஆபீஸ் இருக்கிறபோது 3 லட்ச ரூபா வாடகையில் தனி ஆபீஸ் எதுக்கு?” இப்படி கேள்விகளை எழுப்பிய தயாரிப்பாளர்கள் இன்று தயாரிப்பாளர் சங்கத்துக்காக இயங்கி வந்த இரண்டு ஆபீஸ்களையும் இழுத்துப் பூட்டு போட்டு விட்டு கிளம்பி விட்டார்கள்.
இன்று காலை பத்தரை மணி அளவில் தயாரிப்பாளர்கள் எஸ்.வி.சேகர் டி.சிவா, சுரேஷ் காமாட்சி உள்ளிட்ட 1 ௦௦ பேர் ஆகியோர் சங்க அலுவலகம் முன்பாக கூடினார்கள். நிர்வாகிகள் யாரும் வரவில்லை.
இதனால் சங்கத்துக்கு பூட்டு போட்டு விட்டு அண்ணா சாலையில் உள்ள அலுவலகத்துக்கு போனார்கள். அதற்கும் பூட்டு போட்டு விட்டு கலைந்து சென்று விட்டனர்.
எதற்காக இந்த நடவடிக்கை?
எஸ்.வி.சேகர் காட்டமாக பேசினார்.
“எட்டுக்கோடி மக்களுக்கு பிரதிநிதியா இருக்கிற சி.எம். மை சந்திக்கனும்னா டேட் கொடுக்கிறார். ஆயிரம் பேர் இருக்கிற சங்கத்தலைவராக இருக்கிற விஷாலை சந்திக்க முடியல. சங்கம் கூட்டிய ஏழு கூட்டங்களுக்கு அவர் வரல. சங்க விதிப்படி மூணு கூட்டத்துக்கு வரலேன்னாவே பதவி காலி. இவர் மட்டும் எப்படி பதவியில் இருக்கலாம்? இளையராஜாவின் இசை நிகழ்ச்சின்னு ஏற்பாடு செய்திருக்கார்.யாரை கேட்டு செய்திருக்கிறார்.சங்கத்துக்கென ஆபீஸ் இருக்கிறப்ப எதுக்கு மூணு லட்சம் ரூபாய் வாடகையில தனி ஆபீஸ்? ஏழு கோடி ரூபாய்க்கு என்ன கணக்கு. சங்கத்துக்கு இன்னும் மூணு மாதத்தில் எலக்ஷன் வருது.அதனால நாங்க சி.எம்.மை சந்தித்து ஒரு கமிட்டி போட்டு நடவடிக்கை எடுக்கச் சொல்லப் போறோம்” என்றார்.












