திரையரங்கு டிக்கெட், தொலைக்காட்சி மீதான ஜிஎஸ்டி வரி விகிதங்களைக் குறைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி 28 சதவீத ஜிஎஸ்டி வரி விகிதத்தின் கீழ் இருந்து வந்த 6 பொருட்கள் மீதான வரியைக் குறைத்து அறிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் ஜிஎஸ்டியில் உள்ள 1,200 பொருட்களில் 0.5 அல்லது 1 சதவீத பொருட்கள் மட்டுமே 28 சதவீத வரி விகிதத்தில் இருக்கும் என்று உறுதி செய்ததன் முதற்கட்ட நடவடிக்கையாகவும், தேர்தல் 2019-ஐ இலக்காக வைத்துள்ளதையும் இது காட்டுகிறது.ரூ. 100 வரையிலான திரையரங்கு டிக்கெட் கட்டணங்களுக்கு இருந்து வந்த 18 சதவீத ஜிஎஸ்டி 12 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதே நேரம் 100 ரூபாய்க்கும் அதிகமான டிக்கெட் கட்டணங்களுக்கு 28 சதவீதமாக இருந்து வந்த ஜிஎஸ்டி 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது திரையுலகினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.