இப்படியொரு அதிரடிப்படம் தமிழுக்கு புதுசுய்யா! ரணகளம்னு சொல்வாய்ங்களே அது கேஜிஎப் தாங்க.!கன்னட நடிகர் யாஷ் தியேட்டரையே தெறிக்க விடுகிறார்.
கோலாரில் தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதும் அதைக் கைப்பற்ற நினைக்கும் ஆதிக்க சக்திகளுக்குள் நடக்கும் சதிகள், ஒரு ஆளை போட்டுத் தள்ளுவதற்காக மும்பையிலிருந்து வரும் ராக்கி எப்படி கொத்தடிமைகளுக்கு தலைவனாகிறார் என்பதுதான் கதை.அதாவது முதல் பார்ட்.
இரண்டாம் பாகத்தில்இயக்குநர் பிரசாந்த் நீல் என்ன சொல்லப்போகிறாரோ! அதற்காக மாஸ் வெயிட்டிங்.!
ஒளிப்பதிவாளர் புவன்,ஆர்ட் டைரக்டர் சிவகுமார் இவர்கள் இருவரும்தான் படத்துக்கு பலமான அஸ்திவாரம். இயக்குநர் கவலையில்லாமல் அடுக்கு மாடிகள் கட்டலாம்.
தலைமைப்பதவியை அடைவதற்காக சாவடிக்கிற டெக்னிக் பழசுதான் என்றாலும் உயிருடன் இருக்கிற ஆளை செத்துட்டதாக சொல்லிவிட்டு சாகடிக்ககிற மூளை ரத்த உறவையும் பார்க்காது சாமி! போயிட்டியே அய்யான்னு சொல்லி மார்ல படுத்து மூச்சை திணற அடிக்கிறது ராஜ பரம்பரைக்கே சொந்தம் போல!
யாஷ் அடிக்கிற அடியிலே சரசரன்னு சாய்றானுக.எல்லாருமே தடித்தடி ஆளுக.!புழுதி பறக்கிது!
யாஷ் -ஸ்ரீநிதி காதல் சரக்குப்பாட்டிலில் தொடங்குகிறது.செம சீன்.! தமன்னா ஒத்தை ஆட்டம்.இருக்கிற சூடு போதாதுன்னு இவரையும் இறக்கி விட்டிருக்கிறார்கள்.
கோலார் தங்க வயலுக்கு போய் எடுத்த மாதிரி பிரமாண்டம் காட்டி இருக்கிறார்கள்.அங்கே வேலை பார்க்கிற அடிமைகள் படுகிற பாடு தாங்காதய்யா பூமி! இயக்குநரின் வருடக்கணக்கான உழைப்பு அங்குதான் தெரிகிறது. ஆர்ட் டைரக்டர்,கேமராமேன் இருவருக்கும் விருதுகள் நிச்சயம்.
பார்க்கவேண்டிய படம்.!