“கேவலமான தலைமை!”விஷாலை வறுத்தெடுத்த டி.சிவா, சக்தி சிதம்பரம்.!

தயாரிப்பாளர் சங்கம் ரெண்டுபட்டு கிடப்பது ஊர் அறிந்த விஷயம். சக்களத்தி சண்டை மாதிரி ஆகிப்போச்சு.! கிடைக்கிற மேடையில் இரு சாராரும் வார்த்தைகளை அள்ளி வீசிக்கொள்கிறார்கள். பூட்டுப் போட்ட விவகாரத்துக்குப் பின்னர் முதலில் நடந்த இசை வெளியீட்டு விழாவில் அதை பார்க்க முடிந்தது.
சங்கர் மூவீஸ் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பாக ஜோசப் பேபி என்பவர் தயாரித்திருக்கிற படம். “ என் காதலி சீன் போடுறா “ அங்காடிதெரு மகேஷ் நாயகனாக நடிக்க, நாயகியாக ஷாலு என்ற புதுமுகம் அறிமுகமாகி இருக்கிறார். இவர்களுடன்ஆடுகளம்நரேன், மனோபாலா, அஞ்சலிஅம்மா,அம்பானிசங்கர், தென்னவன், தியா,வையாபுரி, ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். முக்கிய வேடத்தில் விஜய் டிவி.கோகுல் நடித்துள்ளார் அவருக்கு தங்கையாக நிஷா நடித்துள்ளார்.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு பாக்யராஜ்,தயாரிப்பாளர் டி.சிவா,இயக்குநர் ஷக்தி சிதம்பரம்,தருண் கோபி இன்னும் பலர் வந்திருந்து வாழ்த்தினார்கள். கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கிய ராம் சேவா அவருக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை சொல்லவும் முடியாமல் மறைக்கவும் முடியாமல் தழுதழுத்தது உருக்கமாக இருந்தது. படத்துக்கு இசை அம்ரிஷ்.
வாழ்த்தி பேச வந்த ஷக்தி சிதம்பரம்தான் விஷாலின் மீது முதல் குண்டை வீசினார். “கேவலமான தலைமையில் 2 வருடமாக இருந்து வர்றோம்.நல்ல தலைமையை வருகிற தேர்தலில் புதிதாக தேர்ந்தெடுப்போம் ” என்று பேசிவிட்டு அமர்ந்து விட்டார். 
தயாரிப்பாளர் டி.சிவா நைஸ் குத்தாக குத்தினார். “தயாரிப்பாளர் சங்கத்தலைவராக பிளைட் ஓட்டுகிறவரை கொண்டு வந்து ரயிலை ஓட்ட வச்சிட்டோம்” என்றார்.
இந்த இருவரும் இப்படி பேச இசை அமைப்பாளர் அம்பரீஷ் பேசியதுதான் ஹை லைட்.!
“தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் சாருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். இந்த படத்துக்கு ஆன்லைன் உரிமையை வாங்கித் தருவதாக உறுதி அளித்திருக்கிறார்” என்று நன்றி தெரிவித்தார்.இதையெல்லாம் பார்த்து ரசித்தவர் பாக்யராஜ்,