கேரக்டருக்கு ஏற்ற குண்டம்மாவாக மாறுகிறேன் என சொல்லி ஜீரோ சைஸ் படத்துக்காக அனுஷ்கா மேடம் இடுப்பை விரிவாக்கம் செய்தார்.
ஆள் குண்டான அளவுக்கு படம் ஓடவில்லை .
ஏரியை ஆக்கிரமித்தவர்கள் எவிக்சன் ஆர்டரை கடாசியதை மாதிரி உப்பிய உடலில் இருந்து இடுப்பு சதை கரைய மறுத்தது..
யோகா மாஸ்டர் என்பதால் கஜகர்ணம் போட்டுப்பார்த்தும் வேலை ஆகவில்லை .ஆஸ்திரியா போனார்.மாதக்கணக்கில் தங்கி சிகிச்சை பெற்றும் வீங்குன உடலில் மாற்றம் இல்லை.
அண்மையில் டைரக்டர் ராஜமவுலியின் மகன் கல்யாணத்துக்காக ஜெய்ப்பூர் வந்த அனுஷ்காவை நீங்களும் பாருங்கள்.