ஷாம் என்கிற ஒரு நடிகர் இருந்தாரே ஞாபகம் இருக்கா? அதாங்க மெழுகுவர்த்தி படத்துக்காக தன்னையே உருக்கிட்டாரே ,அப்படி மெனக்கெட்ட மனுசனை மறந்திங்கன்னா என்னத்த சொல்றது? இப்ப அவர் பார்ட்டி படத்தில் நடித்திருக்கிறார்.
அம்மா கிரியேஷன்ஸ்டி.சிவா தயாரிப்பு. வெங்கட்பிரபு இயக்கம். கலக்கலான சிறப்பு தோற்றம்.
இந்த படத்தில் நடித்திருப்பது குறித்து ஷாம் கூறும்போது,
“அம்மா கிரியேஷன்ஸ் சிவா, எனக்கு அண்ணன் மாதிரி.. என்னுடைய திரையுலக பயணத்தில் மிகுந்த அக்கறை காட்டுபவர்.
அவரிடமிருந்து திடீரென ஒருநாள் அழைப்பு வந்தது.. அவர் தயாரித்து வரும் ‘பார்ட்டி’ படத்தில் நடிக்குமாறு என்னிடம் கேட்டார்.
இயக்குநர் வெங்கட் பிரபு இளைஞர்களை ஈர்க்கும் படம் பண்ணக்கூடியவர்.அவரது படங்களில் நடிக்க வேண்டும் என்பது எனது ஆசை.. ப்ளஸ் சிவா அண்ணன் படம்.. டபுள் தமாக்கா! உடனே ஓகே சொல்லி ஃபிஜிக்கு போனேன்.
அதற்கேற்ற மாதிரி அந்த கதாபாத்திரமும் என் மனதுக்குப் பிடித்த ஒன்றாக இருந்தது. மேலும் வெங்கட்பிரபு டைரக்ஷனில் நடிப்பதும் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி. செம ஜாலியான… நட்புக்கு மரியாதை கொடுக்குற அற்புதமான டீம்! கிக் படத்தில் கிடைத்த நல்ல பெயர் இதிலும் கிடைக்கும்னு நம்புறேன்.
இன்னொரு பக்கம் கதாநாயகனாக நடித்துவரும் ‘காவியன்’ படம், முழு வீச்சில் தயாராகி வருகிறது. இது தவிர நல்ல படங்களையும் எனது தயாரிப்பில் உருவாக்கும் பொருட்டு, இரண்டு கதைகளைத் தேர்வு செய்துள்ளேன்.
மேலும் வெளி தயாரிப்பில் அருமையான கதை ஒன்றைக் கேட்டு நடிக்க ஒப்புக்கொண்டுள்ளேன்.
எத்தனை படங்கள் நடித்தோம் என்பதைவிட, எவ்வளவு காலம் ரசிகர்களின் மனதில் நிற்கும் விதமான படங்களில் நடித்தோம் என்பதில் தான் தற்போது அதிகம் கவனம் செலுத்தி வருகிறேன். அந்தவிதமாக வரும் 2019ல் நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் பார்க்கலாம்” என்கிறார்.