
தமிழ்ச்சினிமாவையை தனது பிடிக்குள் வைத்திருந்தவர் கேப்டன் விஜயகாந்த் . அரசியலிலும் அப்படித்தான் ! ஜெயலலிதாவின் ஆணவப்பிடிக்குள் சிக்காதவர். எத்தனையோ வழக்குகள் வந்தபோதும் எதிர்கொண்டவரை நோய் பற்றியது.
சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார்.அவரைப் பற்றிய வதந்திகளுக்கு வால் முளைத்தது .
ஆனால் அவரோ ஐ மேக்ஸ் தியேட்டரில்மனைவியுடன் ‘அக்வா மேன்’சினிமா பார்த்ததை டிவிட்டரில் வெளியிட்டிருக்கிறார்.எப்படி உட்கார்ந்திருக்கிறார் பாருங்கள் ,கால் மேல் போட்டபடி! இவரை வதந்திகள் என்னய்யா செய்யமுடியும்?












