இசைப்புயல்ஏ ஆர்.ரகுமான் இன்று தனது 52வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரையுலகினர் பலரும் இன்று காலை முதல் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.இந்நிலையில் ஏ.ஆர்.ரகுமானின் மகனும் பாடகருமான ஏ.ஆர்.அமீன் இன்று தனது சமூக வலைத்தளத்தில் தனது தந்தைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறியுள்ளது வைரலாகியுள்ளது.அப்படி என்ன தான் கூறியுள்ளார் நீங்களும் பாருங்களேன்,’அன்புள்ள தந்தையே! இன்றைய உங்கள் பிறந்த நாளில் நான் ஒன்றை கூற விரும்புகிறேன். நீங்கள்தான் என்னுடைய உண்மையான நண்பர், ஆசிரியர் மற்றும் உத்வேகத்தை தூண்டும் அனைத்தூமாக உள்ளீர்கள்’ என்று தெரிவித்துள்ளார். மகன்தனக்கு அனுப்பிய டுவிட் வைரலாவது கண்டு நிஜமாகவே மகிழ்ச்சியில் திளைத்துள்ளாராம் இசைப்புயல்.
https://twitter.com/arrameen/status/1081730732383363072












