‘வாலு’வுக்கு எதிராக காய் நகர்த்துகிறரா உதயநிதிஸ்டாலின்! ‘வாலு’ வெளியீட்டுக்கு எதிரான வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டதாகவும், படம் திட்டமிட்டபடி ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகும் என்றும் சிம்பு அறிவித்திருந்தார். இதனால் வரது ரசிகர்கள் உற்சாக மிகுதியில் இருந்தனர். ஆனால், நேரம் நெருங்க, நெருங்க படம் திட்டமிட்டபடி வெளியாகுமா? என்ற சந்தேகத்தை கிளப்பி வருகிறது. இந்நிலையில், நடிகர் சிம்பு நேற்று செய்த டிவிட்டில் ‘வாலு பட ரிலீஸை தடுத்து நிறுத்துவதற்கு இப்போதும் சிலர் முயற்சித்து வருகிறார்கள். ஆனால், ரசிகர்கள் என்மீது வைத்திருக்கும் அன்பை அவர்களால் தடுத்து நிறுத்த முடியாது. கடவுள் இதற்கு மீண்டும் பதில் சொல்வார்!’’ என்றும் ‘‘வாழு… வாழ விடு. கடவுள் ஆசீர்வதிப்பார்!’’ என்றும் ட்வீட் செய்திருந்தார் இந்நிலையில், இப்படத்தின் வெளியீட்டுக்கு எதிராக உதயநிதி ஸ்டாலின் காய் நகர்த்துவதாகக் கூறி ரசிகர்கள் சிலர், ட்விட்டரில் உதயநிதி பேரில் எதிர்மறையாக டிரென்ட் செய்தார்கள். இதனைக் கண்டித்து ட்வீட் செய்துள்ளார் உதயநிதி ஸ்டாலின். ‘‘ரொம்பவும் காமெடியா இருக்கு. ‘வாலு’ படத்தை நான் ஏன் தடுக்க வேண்டும்? என்னால் எப்படி தடுக்க முடியும்? இதில் ஏதாவது லாஜிக் இருக்கிறதா? ஒரு முடிவுக்கு வரும்முன் நன்றாக யோசியுங்கள்.’’ என்றும்,‘‘இன்று காலை முதல் முழுநீள காமெடிக் காட்சிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. அடுத்தமுறை கொஞ்சம் புத்திசாலித்தனமாக செயல்படுங்கள். முட்டாள்தனம்! எந்த காரணமுமில்லாமல் என்னை டிரென்ட்டில் கொண்டுவந்த நண்பர்களுக்கு நன்றிகள்!’’ என்றும்,‘‘நான் எந்த நடிகருக்கும், நடிகர்களின் ரசிகர்களுக்கும் எதிரானவன் அல்ல. ஆனால், ஒரு அடிப்படையான விஷயத்தைப் புரிந்துகொள்ளுங்கள்… மற்றவர்களைப் பற்றி கமென்ட் செய்யும் முன்பு, உங்களுடைய மூளையை (மூளை இருந்தால்) உபயோகியுங்கள்!’’ என்று காட்டாமாக பதிலடி கொடுத்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின் இந்நிலையில் மீண்டும் சிம்பு, ஒரு ட்வீட்டில், ‘‘ரசிகர்களை அமைதியாக இருக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்… கடவுள் அருளால் எல்லாம் சரியாகிவிடும். ஏதாவது இருக்கும்பட்சத்தில் நானே அறிவிக்கிறேன்… எனவே அமைதியாக இருங்கள்!’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.