யுவனின் ஆலிஸ் படத்தில் என்ன சிறப்பு?

தனது இசை அமைப்பு திறமையால் தமிழ் ரசிகர்களை தன் வயப் படுத்தி உள்ள யுவன் ஷங்கர் ராஜா , தனது சொந்த பட நிறுவனம் மூலம் “பியார் பிரேமா காதல்” என்கிற படத்தை உருவாக்கி பெரும் வெற்றியும் பெற்றார்.
தற்போது அவரது தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிப்பில், சீனு ராமசாமி இயக்கத்தில் பெயர் இடப்படாத படம் ஒன்றையும் தயாரித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கேரளாவில்.நடந்து வருகிறது.
Related Posts
இதை தொடர்ந்து தனது தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த படத்தின் அறிவிப்பை இன்று வெளி இட்டார்.
பிக் பாஸ் ரைசா வில்சன் “ஆலிஸ்” இந்த படத்தில் நடிக்கிறார். அறிமுக இயக்குனர் மணி சந்துரு இயக்கம்.
“ஆலிஸ்” ஒரு பிரமாதமான கதை. இயக்குனர் கதை சொன்ன தருணத்திலேயே இந்த படத்துக்கு ரைசா தேர்ந்து எடுக்கப்பட்டார். . மற்ற நடிக நடிகையர் தேர்வு நடை பெற்றுக் கொண்டு இருக்கிறது.எங்கள் நிறுவனத்தின் கோட்பாட்டின் படி இந்த படத்தில் இயக்குநர் மணி சந்திரன் தவிர, ஒளிப்பதிவாளர் எழில் அரசு , கலை இயக்குனர் ஏ ஆர் ஆர் மோகன், அர்ஜுனா நாகா ஏ கே படத்தொகுப்பாளராக அறிமுகமாகின்றனர். யுவன் ஷங்கர் இசை அமைக்கிறார் . படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. ரசிகர்களுக்கு எங்களது நிறுவனம் தொடர்ந்து நல்ல படங்கள் வெளி வரும் என்று உத்திரவாதம் அளிக்கிறோம்” என்கிறார் தயாரிப்பாளர் இர்பான் மாலிக்.