கட்சிப்பெயரை அறிவித்து கட்சிக்கொடியை ஏற்றும்வரை டவுட்டுதான்! இன்னமும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் ரஜினி அரசியலுக்கு வரப்போவதில்லை.என்பதாக.!
ரஜினி மன்றங்களை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றினாரே தவிர அரசியல் இயக்கமாக மாற்றுவதற்குரிய அடிப்படை வேலைகள் எதையுமே செய்யவில்லை என்கிறார்கள்.தொடர்ந்து படங்களில் நடிப்பதற்கான வேலைகளில் ஆர்வமாக இருக்கிறார். சூப்பர் ஸ்டார்.
இவரின் மருமகன் தனுஷ் திருப்பதியில் சாமி கும்பிட்டு திரும்பியபோது வழக்கம் போல பத்திரிகையாளர்கள் மைக்கை நீட்டி இருக்கிறார்கள்.
“ரஜினி கட்சி ஆரம்பித்தால் உங்கள் ஆதரவைத் தருவீர்களா?”என அறிவு பூர்வமான கேள்வியை கேட்டிருக்கிறார்கள். அவர் பதில் ஏதும் சொல்லாமல் சிரித்தபடியே காரில் ஏறி விட்டார்..ஆனால் பாபா முத்திரையை மட்டும் காட்டி இருக்கிறார். இதற்கு அர்த்தம் அவர் ஆன்மீகத்தில் தான் இருப்பார் அரசியலுக்கு வரமாட்டார் என்பதாக கருதலாமா? அட போங்க ஸார்!