தொத்தலான பயந்தாங்கோழிக்கு பக்கத்தில் பயில்வான் பாதுகாப்பு அதிகாரியாக இருந்தால் அந்த வத்தலுக்கும் வாய் நீளும் என்பார்கள்.
அது மாதிரிதான் ஆகி இருக்கிறது யார் யாரோ சினிமாக்காரர்களை மிரட்டுவதும்.!
அதிமுக என்கிற பெயரில் மிரட்டி வருகிறார்கள்.
எல்.கே.ஜி .என்கிற பெயரில் காமடிப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.
படத்தை எடுத்திருப்பவர் ஐசரி வேலனின் மகன் கணேஷ்.
எம்.ஜி.ஆர்.அமைச்சரவையில் ஐசரி வேலன் அமைச்சராக இருந்தவர்.
எம்.ஜி.ஆர்.வளர்த்த கட்சி இன்று யார் யார் கையிலோ சிக்கி சின்னாபின்னமாகி இருக்கிறது.ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று நாடே சந்தேகப்படுகிறது.
இந்த நிலையில் ஆர்.ஜெ.பாலாஜியை வைத்து எல்.கே.ஜி. படத்தை எடுத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் பிரவீன் குமார் என்கிற பெயரில் டிவிட்டரில் “படம் ரிலீஸ் ஆகட்டும் உன் கட் அவுட்டுக்கு செருப்பு அபிசேகம் பண்ணிடுறேன்”என்பது பதிவாகி இருக்கிறது.
இதற்கு பாலாஜி “இதுவரைக்கும் யாருக்கும் பண்ணாத மாதிரி அண்டா அண்டாவா பண்ணி நம்ம மாஸ் காட்டுங்க”என்று தனது ரசிகர்களுக்கு சொன்னது மாதிரி நையாண்டி பண்ணி இருக்கிறார்.