
பிப்.1 1 -ல் சூப்பர் ஸ்டார் ரஜினியின் இரண்டாவது மகளுக்குக் கல்யாணம். பொதுவாக நடிகர் வீட்டுக்கல்யாணம் என்றால் லட்சங்களை இறைப்பார்கள். ஆடம்பரம் ,அமர்க்களம் என்று கொண்டாடிவிடுவார்கள்.
ஆனால் கல்யாணத்தை வீட்டில் சிம்பிளாக நடத்தி விடலாம் என முடிவு செய்திருக்கிறார்கள்.
காரணம் ரஜினியின் மகள்
சவுந்தர்யாவுக்கு இது இரண்டாவது கல்யாணம். வளர்ந்த மகன் வேறு இருக்கிறான்
மணமகன் விசாகனுக்கும் இது இரண்டாவது கல்யாணம்தான்!
அதனால் வரவேற்பை மட்டும் 7 ஸ்டார் ஹோட்டலான லீலா பாலஸில் நடத்துவதென முடிவு செய்திருக்கிறார் ரஜினி.
விசாகனின் குடும்பம் திராவிட இயக்கம் சார்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. வாழ்க மணமக்கள்!












