வருகிற பிப்ரவரி மாதம் ரஜினியின் மகள் சவுந்தரியாவுக்கு இரண்டாவது திருமணம் நடக்க இருக்கிறது. ஏற்கனவே திருமணமாகி முதல் கணவர் வழியாக பிள்ளையும் இருக்கிறது. விவாக ரத்தாகி வீட்டிலேயே இருந்தார்.
பெரியவர்கள் கூடிப் பேசி திருமணம் நடப்பதற்கு ஏற்பாடு செய்தார்கள். விசாகன் என்கிற மிகப்பெரிய தொழிலதிபருக்கும் சவுந்தர்யாவுக்கும் திருமணம் பேசி முடிக்கப்பட்டது.
புதிய வாழ்க்கை நல்லறமாக வேண்டும் என ஒவ்வொரு கோவிலாக சென்று வருகிறார் சவுந்தர்யா, தாணுமாலையன் கோவிலுக்கு சென்று சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.