நடிகர் ஆர்யா. நயன் தாரா, எமி ஜாக்சன் உட்பட பல்வேறு நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டநிலையில்,;கஜினிகாந்த்படபிடிப்பின் போது அதில்கதாநாயகியாக நடித்த சாயிஷா சைகலை காதலிப்பதாகவும் இருவரும் ஒரே மதம் என்பதால் இவர்களின் காதலுக்கு இருவீட்டாரும் சம்மதித்து விட்டதாகவும் விரைவில் இவர்களது திருமண செய்தி வெளியாகலாம் எனவும் பரவலாக பேசப்பட்டது. இதை அவர்கள் மறுக்கவில்லைஇந்நிலையில் இருவரும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மார்ச் மாதம் 10 ஆம் தேதி ஐதராபாத்தில் இவர்கள் திருமணம் நடக்க இருக்கிறது.சாயிஷா, பிரபல இந்தி நட்சத்திரங்கள் திலிப் குமார்-சாயிரா பானு தம்பதியின் பேத்தி.என்பது குறிப்பிடத்தக்கது.