வாலிப சேட்டைகளில் வாகை சூடியவர் ஆர்யா.
இவரின் பெயரைக் கேட்டாலே இன்ப உலகத்தின் வாசல் திறந்து வழி கொடுக்கும்.
அந்த அளவுக்கு நடிகைகளுடன் கிசு கிசுக்கப்பட்டவர். இவரும் விஷாலும்!
சில நடிகைகளுடன் லிவ்-இன்-ரிலேஷன் ஷிப்பில் இருந்ததாக சொல்லப் பட்டவர்கள்.
முதலில் யாருடைய கல்யாணம் நடக்கும் என்பது பற்றி இருவருமே மேடைகளில் பேசியது உண்டு.
இருவருமே வயதான வாலிபர்கள்தான். தற்போது இருவருக்குமே கல்யாணம் உறுதியாகி விட்டது என்பதுதான் மகிழ்ச்சிக்குரிய விஷயம்.
ஆர்யா அவரது மதத்தை சேர்ந்த ஷாயிஷாவையே கல்யாணம் செய்து கொள்ளப் போகிறார்
தற்போது இருவரும் சூர்யா ,மோகன்லால் நடித்து வரும் காப்பான் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அனேகமாக திருமணத்துக்கு முன்னதாகவே தேனிலவு கொண்டாடும் அளவுக்கு நெருக்கமாக இருப்பவர்கள் இவர்களாகத்தான் இருக்க முடியும்.
பூனையையும் பால் கிண்ணத்தையும் பக்கத்தில் வைக்க முடியுமா?
இருவரும் வெளிநாட்டில் ஜாலியாக இருக்கிற படத்தை இணையத்தில் வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்கள்.