ஹன்சிகாவின் ‘கஞ்சா’ போஸ்டர். மாட்டுவாரா நடிகை.!
யு.ஆர்.ஜமீல் இயக்கத்தில் நடிகை ஹன்சிகா கதை நாயகியாக நடிக்கும்’ மகா ‘ படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியானது., ‘காசி’யின் பின்னணி .
துறவி கெட்டப்பில் ஹன்சிகா, கஞ்சா அல்லது சிகரெட் புகைப்பது போன்ற காட்சி இடம்பெற்று இருந்தது
இது,இந்து மத உணர்வுகளையும், பெண் துறவிகளையும் கொச்சைப்படுத்தும் வகையில் இருப்பதாகவும் போஸ்டர் காட்சியை அமைத்த இயக்குனர் ஜமீல் மீதும், அதில் இடம்பெற்றிருந்த நடிகை ஹன்சிகா மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை மாநகர போலீஸ் கமிஷனரிடம் இந்து மக்கள் முன்னணியின் அமைப்பாளர் வி.ஜி.நாராயணன் என்பவர் புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில்,ஒரு மாதத்திற்கு மேலாகியும் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால், நடவடிக்கை எடுக்க சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிடக் கோரி,வி.ஜி.நாராயணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், நாரயணன் அளித்த புகாரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து இரண்டு வாரத்தில் பதிலளிக்க சென்னை மாநகர காவல் ஆணையாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.