நீயா-2 பட இயக்குனரிடம் 3 மணி நேரம் கதை கேட்ட ராய்லட்சுமி !
நீயா-2 படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு இன்று சென்னையில் நடந்தது.இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட
இயக்குநர் வெற்றி மாறன்பேசியதாவது,‘சுரேஷ் நானும் ஒன்றாக பணியாற்றியிருக்கிறோம். தொடர்ந்து போராடிக்கொண்டே இருப்பார். சுரேஷ் சோர்வடைந்து நான் பார்த்தது கிடையாது. எந்த சூழ்நிலையிலும் உறுதியைக் கைவிடமாட்டார். வெற்றிக்கு எது ஏற்றதோ அதை சிறப்பாக செய்யகூடிய ஆற்றல் அவரிடம் இருக்கிறது. இப்படத்தைப் பார்க்கும் போது வெற்றியடையும் என்று தோன்றுகிறது.
ராய் லட்சுமிபேசியதாவது, ‘2 வருடங்களுக்கு பிறகு தமிழில் நடிக்கிறேன். சுரேஷ் கதை கூறினார். 3 மணி நேரம் கதை கேட்ட பிறகு இது பெரிய படமாக இருப்பது போல் உள்ளது. அதை கவனத்துடன் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பொறுமையாக ஆலோசித்து முடிவெடுத்தேன். பாம்பை மையமாக வைத்து உருவாகியிருக்கும் படம். பேய் படங்களுக்கு நிறைய வாய்ப்பு வந்தது. ஆனால் இப்படத்தின் காதல், திரில்லர் அதனுடன் பாம்பு கதை. இப்படத்தில் நானும் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி’.
இயக்குநர் எல். சுரேஷ் பேசும்போது,
இப்படத்தில் நிஜ வில்லன் மழை தான். ஆகையால், படப்பிடிப்பை மிகுந்த சிரமத்திற்கிடையில் தான் நடத்தினோம். வரலட்சுமிக்கு கடினமான கதாபாத்திரம் கொடுத்திருக்கிறோம். அவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்.