நடிகர், இயக்குனர் கே.பாக்யராஜின் மகனும் நடிகருமான சாந்தனுவுக்கும், தொலைக்காட்சி தொகுப்பாளினி கீர்த்திக்கும் திருமணம் நடந்தது. இவர்களது திருமணத்திற்கு நடிகர் விஜய் முதல் ஆளாக வந்திருந்து, தாலி எடுத்துக் கொடுத்து மணமக்களை ஆசீர்வதித்தும் சென்றார்.
இந்நிலையில் விஜய், புதுமண தம்பதிகளை தனது வீட்டுக்கு வரவழைத்து அவர்களுக்கு விருந்தளித்து மகிழ்ந்துள்ளார். இத் தகவலை நடிகர் சாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் ,’ இந்த சந்தோஷ தருணம் குறித்து சாந்தனு விஜய் அண்ணாவும், சங்கீதா அக்காவும் எங்களை மிகவும் நன்றாக உபசரித்தனர். இந்த நாளை என் வாழ்க்கையில் என்றுமே மறக்க முடியாது” என்று தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
இயக்குநர் பாக்யராஜின் திருமணத்தை அமரர் எம்.ஜி.ஆர் தாலி எடுத்துக் கொடுத்து நடத்தி வைத்தது குறிப்பிடதக்கது..












