போகிறபோக்கில் புழுதியை வாரி இறைத்துவிட்டு செல்வதைப் போல செல்வாக்கானவர்கள் மீது பொய்யான குற்றங்களை சுமத்துவது ஒருவித பேஷனாகி விட்டது.
இதிலும் விளம்பரம் கிடைக்கிறதல்லவா!
பொய்யான குற்றம் சாட்டுவதால் உண்மையான குற்றவாளிகள் சுலபமாக தப்பிவிடுகிறார்கள்.
மெக்சிகன் ராக் பாண்ட் இசைக்குழுவை சேர்ந்த வேகா ஜில் என்கிற இசைக்கலைஞர் பொய்யான மீ டூ புகாரினால் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அறுபத்திநான்கு வயது.
டிவிட்டரில் வெளியான ஹாஸ்டாக்கில் யாரோ ஒரு பெண் மீ டூ குற்றம் சாட்டி இருந்தார்.
“என் மீது பொய்யான குற்றச்சாட்டு .முழுக்க முழுக்க பொய்யானது. நான் தற்கொலை செய்து கொள்வதால் என் மீதான குற்றச்சாட்டு உண்மை ஆகிவிடாது. குற்றத்துக்குப் பயந்துதான் நான் தற்கொலை செய்து கொண்டுவிட்டேன் என யாரும் தப்பாக நினைத்து விடாதீர்கள். என்னுடைய மகன் நிம்மதியாக வாழ வேண்டும் ,அவன் பாதிக்கப்படக்கூடாது “என்று கடிதம் எழுதி வைத்திருக்கிறார்.
ஒரு மானஸ்தன் அநியாயமாக உயிர் இழந்திருக்கிறான்.