CAST AND CREW
Production: Cameo Films – CJ Jayakumar
Cast: Anandhi, GV Prakash, Manisha Yadav, VTV Ganesh
Direction: Aadhik Ravichandaran
Screenplay: Aadhik Ravichandaran
Music: GV Prakash .Cinematography: Richard M. Nathan
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ‘டார்லிங்’ படத்தை தொடர்ந்து,கதாநாயகனாக நடித்துள்ள மற்றொரு படம்,திரிஷா இல்லேன்னா நயன்தாரா.
ஜீவா (ஜி.வி.பிரகாஷ்), ரம்யா (ஆனந்தி) மற்றும் அதிதி (மனிஷா) மூவரும் மருத்துவமனை ஒன்றில் ஒரே நேரத்தில் ஒரே பிரசவ வார்டில் பிறக்கின்றனர். குழந்தைப்பருவ நண்பர்களாக ஒரே குடியிருப்புப் பகுதியிலும் அவர்கள் வளர்கின்றனர். பருவ வயதில் அடியெடுத்து வைக்கும் காலத்தில், அதிதி வெளியூர் சென்று விட, ஜீவாவுக்கும் ரம்யாவுக்கும் இடையில் காதல் மலர்கிறது. அவர்கள் சில,பல காதல் சேட்டைகளிலும் ஈடுபடுகின்றனர். அப்போது ஜீவா செய்யும் ஒரு தவறு காரணமாக அவர்கள் காதல் உடைகிறது..பிறகு என்ன, ஜீவாவின் வாழ்வில் அதிதி நுழைய அவர்களுக்கிடையிலான காதலும் சில மோதல்களால் பிரிகிறது. இதையடுத்து கும்பகோணம் செல்லும் ஜீவா அங்கு ரம்யாவை சந்திக்கிறான். அதைத் தொடர்ந்து என்ன ஆகிறது என்பதே மீதிக் கதை.இன்றைய காதலை இயக்குனர் துணிச்சலுடன் படம் பிடித்து காட்டியிருக்கிறார். ஆனால் கொச்சையான,பச்சையான வசனங்கள் ,காட்சிகள் இரண்டும் கெட்டான் வயதில் அடியெடுத்து வைக்கும் விடலை பருவத்தினரை ‘விடாது கருப்பாக ‘பிடித்துக்கொள்ளும்.விடலைகளில் காதல் அல்லது பருவ ஈர்ப்பு தொடர்பானவற்றை ஒளிவு மறைவின்றி காட்சிப்படுத்தியிருக்கிறார்.இயக்குனர். இந்த படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் கொடுத்தது நூறு சதவீதம் பொருத்தமே! குடும்பத்துடன் செல்லும் குடும்பத்தலைவன் பாடு அதோ கதி தான்! குறிப்பாக பெண்களை ஆண்களின் பிரச்சனையாகப் பார்க்கும் வசனங்களும் மது அருந்தும் பெண்கள் மீதான விமர்சனங்களும் இளம் ஆண்களை வெகுவாகக் கவர்வதை அரங்கில் எழும் கைதட்டல்களிலும் விசில் சத்தங்களிலும் கேட்க முடிகிறது.பெண்கள் மது அருந்துவதை கடுமையாக விமர்சித்து அதனால் ஏற்படக்கூடிய சமுதாய சீரழிவுகளை விவரிக்கும் படமாகவும் காட்டியிருக்கும் இயக்குனருக்கு விரைவில் பெண்கள் அமைப்புகள் கொடி உயர்த்தலாம்! தடை கேட்கும் கோஷமும் விரைவில் கேட்பது உறுதி! இப்படியொரு கேரக்டர்களில் நடித்த ஆனந்தி ,மனிஷாவின் துணிச்சல் அசாத்தியமானது! மொத்தத்தில் ஜீ.வி.பிரகாசே குடும்பத்துடன் இப்படத்தை பார்க்க முகம் சுளிப்பார். rating 2/5.