எஸ்.என்.எஸ். மூவீஸ் கவுசல்யா ராணி தயாரிக்கும் படம் ” தமிழரசன் “ இந்த படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்.
இந்த தமிழரசன் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைக்கிறார். அவரது இசையில் பல வருடங்களுக்குப் பிறகு யேசுதாஸ் இந்த படத்திற்கு ஒரு பாடலை பாடிச் சென்றார்.
பலரும் இந்த நிகழ்வை இன்ப ஆச்சர்யமாக கொண்டாடி வந்த வேளையில், இந்த படத்திற்காக இளையராஜா இசையில் தற்போது, எஸ்.பி.பி, பழனிபாரதி எழுதியிருக்கும் “ வா வா என் மகனே “ எனது தொடங்கும் ஒரு மெலடி பாடலை பாடியுள்ளார்.
சில ஆண்டுகளாக இளையராஜா இசையில் எஸ்.பி.பி குரல் கேட்க முடியாத ஒரு சூழல் இருந்தது. அந்தச் சூழலை இளையராஜாவின் சுதியும், இசை ரசிகர்களின் நல்ல விதியும் சுமூகமாகச் சாத்தியப்படுத்தி இருக்கிறது.
இந்தப் பாடல் பதிவின் போது இசைஞானியும், எஸ்.பி.பியும் பழைய நிகழ்வுகளை நட்போடு பகிர்ந்து கொண்டார்கள்.
படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவுபெற்று இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விரைவில் இசை வெளியீட்டு விழா மிக பிரமாண்டமாக நடைபெற உள்ளது.