எட்டு தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களில் நடித்தவர் மீராமிதுன் .
இவரது உண்மையான பெயர் தமிழ்செல்வி, இவர் பெங்களூரைச் சேர்ந்தவர்.
நடிப்பதற்கு முன் மிஸ் குயின் ஆஃப் சவுத் இந்தியா, மிஸ் தமிழ்நாடு, மிஸ் சவுத் இந்தியா ஆகிய போட்டிகளில் அழகிப்பட்டம் வென்றுள்ளார்.
தற்போது மிஸ் தமிழ்நாடு திவா எனும் பெயரில் தமிழ்ப்பெண்களுக்கென பிரத்யேகமாக அழகி போட்டி நடத்த முற்பட்டுள்ளார்.
மேலும் அந்த நிகழ்ச்சியை தான் நடத்தக் கூடாது என்பதற்காக மிரட்டல் விடுப்பதாகக் காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்.
அந்தப் புகாரில் அஜித் ரவி, ஜோ மைக்கேல் என்பவருடன் இணைந்து தன்னை மிரட்டுகிறார்கள் என்றும்,அதோடு தனது சமூக வலைதளங்களை முடக்கி தவறாக பதிவுகள் போடுவதாகவும், அவர்கள் மட்டுமல்லாமல் பல புதிய நம்பர்களிடம் இருந்தும் தனக்கு மிரட்டல் வருவதாகவும் சென்னை காவல் ஆணையரிடன் புகார் அளித்தார்.
இந்நிலையில் திடீர் திருப்பமாக அழகிப் பட்டத்தைத் தவறாகப் பயன்படுத்திப் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதானால் அழகி பட்டத்தை திரும்பப் பெறுவதாக மிஸ் சவுத் இந்தியா அமைப்பு என்ற பெயரிலான டுவிட்டர் பக்கத்தில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
https://twitter.com/misssouthindia6/status/1134040189506998272