பாண்டவர் அணி சார்பில் பொதுச்செயலாளர் பதவிக்கு மீண்டும் போட்டியிடும் நடிகர் விஷால் சரத்குமார் மீது குற்றம் சாட்டி வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
இது சரத்குமார் ஆதரவாளர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சரத்குமார் மகளும், விஷாலின் நண்பருமான வரலட்சுமி, தனது டுவிட்டரில் விஷாலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து கூறியுள்ளதாவது, ” டியர் விஷால், உனது சமீபத்திய ஓட்டுவேட்டை வீடியோவை பார்த்து மிகவும் அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்தேன்.
நான் உன் மீது வைத்திருந்த மரியாதை தரை மட்டமானது என் அப்பாவை பற்றிய கடந்த காலம் பற்றி நீங்கள் ஏதும் ஆதாரம் இல்லாமல்,அதை நிரூபிக்காமல் அவரைப் பற்றி பேசி இருப்பது சரியில்லை, உங்கள் கூற்றுப்படி சட்டம் தான் பெரிது என்றாலும், அதையும் நீ நிரூபித்தாக வேண்டும். சட்டப்படி நிரூபிக்கும் வரை குற்றம் சாட்டப்பட்ட எந்த நபரும் அப்பாவிகளே!,
அப்படி அவர் தவறு செய்திருந்தால் இந்நேரம் அதற்கு தண்டனை கிடைத்திருக்கும் .நீங்கள் வெளியிட்டிருக்கும் தரம் தாழ்ந்த வீடியோ பதிவு உங்களது தரத்தையும், நீங்கள் வளர்ந்த விதத்தையும் காட்டுகிறது.நீ தான் எல்லாம் தெரிந்த ஞானி போல பேசாதே!.
உன் இரட்டை வேடம் மற்றும் பொய்களும் எல்லோருக்கும் தெரியும். அப்படி நீ ‘ஞானி’ என்றால், உனது கூட்டணியான பாண்டவர் அணியே, உன்னை விட்டு பிரிந்து தனிக் குழுவாக உன்னை கீழே தள்ளி விட காரணமானது புரிந்திருக்கும்.
என் தந்தை தற்போது எதிலும் சம்பந்தப் படாத நிலையில், அவரை தரம் தாழ்த்திய செயலில் ஈடுபட்டு இருப்பது நல்லதல்ல.
பலபேர் உன்னை தவறாக நினைத்த போதும், உன் மீது மரியாதையும், நீண்டகாலமாக எப்போதும்நட்புடன் இருந்திருக்கிறேன்.
இன்று எல்லாம் முடிந்தது…இப்படிப்பட்ட செயலுக்கு பதில், பாசிட்டிவ்வான நீ செய்த சாதனைகளை வீடியோ பதிவாக்கி வைத்து ஓட்டு கேட்டு இருக்கலாம். இந்த செயல் எனக்கு வருத்தத்தை அளிக்கிறது.
திரையில் மட்டுமல்ல, நிஜத்திலும் நீ நல்ல நடிகன் தான். நீ சொல்வது போல உண்மை என்றும் ஜெயிக்கும். நல்லது என் ஓட்டை நீ இழந்து விட்டாய்! இப்படிக்கு வரலட்சுமி சரத்குமார்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
வரலட்சுமியின் இந்த டுவிட்டர் பதிவு திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஷால் வெளியிட்ட வீடியோபதிவு கீழே..
Truth will Prevail,
We stand by Truth….#NadigarSangamBuilding2019#VoteForPaandavarAni#June23ElectionFull Video @: https://t.co/I44nSfB4wd pic.twitter.com/HHpIiLVLfx
— Vishal (@VishalKOfficial) June 13, 2019