கிரீடம்’ படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் இயக்குனராக களமிறங்கியவர் ஏ.எல்.விஜய். தொடர்ந்து,மதராச பட்டினம்’, ‘தெய்வ திருமகள்’, ‘தலைவா’,, ‘தேவி’ உள்பட பல படங்களை இயக்கியுள்ளார்.தற்போது ஜெயலலிதாவின்வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் தலைவி படத்தை இயக்கி வருகிறார்,இவருக்கும் நடிகை அமலாபாலுக்கும் தெய்வதிருமகள் படத்தின் போது காதல் மலர்ந்தது. கடந்த 2014-ம் ஆண்டில் இருவரும் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்கள். ஆனால், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2017-ம் ஆண்டில் விவாகரத்தும் செய்துகொண்டனர்.விவாகரத்துக்கு பிறகு இருவரும் பரஸ்பரம் திரைப்படத்துறையில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்,இந்நிலையில் இயக்குனர் விஜய்க்கு அவரது பெற்றோர்கள் மீண்டும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்து,தீவிரமாக பெண் தேடி வந்தனர்,அதன்படி,
சென்னை தாம்பரத்தை அடுத்த மண்ணிவாக்கத்தை சேர்ந்த ராஜன்பாபு – அனிதா தம்பதியினரின் மகள் ஐஸ்வர்யாவை விஜய்க்கு பேசி முடித்தனர்.தற்போது சென்னை கோடம்பாக்கத்தில் வசித்து வருகின்றனர், ஐஸ்வர்யா தற்போது எம்.பி.பி.எஸ்.’ படித்து முடித்து ஒரு வருடம்மருத்துவமனை ஒன்றில் பிராக்டிகல் பயிற்சி பெற்று வருகிறார்,இவர்களது திருமணம்
அடுத்த மாதம் 11-ந் தேதி, சென்னையில் நடக்கிறது. திருமணத்துக்கான ஏற்பாடுகளை இரு வீட்டினரும் இணைந்து செய்து வருகின்றனர்.












