நடிகர் ரஜினிகாந்த் நேற்று இரவு விமானம் மூலம் மும்பையில் இருந்து சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது, ‘குடிநீர் பிரச்சனையில் சிக்கித் தவிக்கும் தமிழக மக்களுக்கு தண்ணீர் வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ள எனது மக்கள் மன்ற ரசிகர்களை மனமார பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன். ரசிகர்கள் செய்வது மிகவும் நல்ல விஷயம். இது போன்ற நல்ல வேலைகளை மன்றம் தொடங்கியது முதலே நாங்கள் செய்து வருகிறோம். இப்போதுதான் வெளியே தெரியத் தொடங்கியுள்ளது. குடிநீர் பிரச்சினையை தீர்க்க மழைநீரை சேகரிக்க வேண்டும். இதற்காக உடனடியாக ஏரி குளங்கள் உள்பட நீர் நிலைகளை தூர்வார வேண்டும். மழை வருவதற்கு முன்பு எல்லாவற்றையும் சரி செய்து மழை நீரை சேமிக்க வேண்டும். தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் இந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும். மத்தியில் பாரதிய ஜனதா இப்போதுதான் பொறுப்பேற்றுள்ளது. அவர்கள் நதிநீர் இணைப்புகளை நிச்சயமாக செய்வார்கள் என்று நம்புகிறேன்.நடிகர் சங்க தேர்தலில், வாக்களிக்க வாக்கு சீட்டு உரிய நேரத்தில் எனக்கு கிடைக்கவில்லை. வாக்களிக்காதது எனக்கு வருத்தம்தான். ஏதோ தவறு நடந்திருக்கிறது .இவ்வாறு அவர் கூறினார்