கோடியில் சம்பாதிக்கும் எல்லா நடிகர்களுக்குமே பிறர்க்கு உதவுகிற எண்ணம் இருப்பதில்லை.
சில நடிகர்கள்தான் தனது பணத்தில் ஏழை எளியவர்களுக்கு உதவிகள் செய்து வருகிறார்கள்.
அரசுக்கு வரியாக கட்டி என்ன பயன் இப்படி உதவி செய்தால் பெயராவது கிடைக்குமே என்கிற எண்ணம் சிலருக்கு இருக்கிறது. சில நடிகர்கள் ரசிகனை செலவு செய்ய வைத்து வள்ளல் பெயர் வாங்கி விடுகிறார்கள். கைக்காசு கருணைக்கிழங்கு.இவர்கள் முதலீடு பெரும்பாலும் வெளி மாநிலங்கள்,அந்நிய நாடுகள்தான்.
ஆனால் சல்மான்கான் வித்தியாசமான ஆள்.!
கல்யாணம் இல்லை.
வாடகைத்தாய் வழியாக குழந்தை பெற்றுக் கொள்ளப் போகிறார்..
இருந்தாலும் தனது ரசிகர்களுக்காக எஸ்.கே.27 என்கிற பெயரில் நாடு முழுவதும் 300 ஜிம்களை திறக்க திட்டமிட்டிருக்கிறார். 2020-ஆம் ஆண்டுக்குள் அதாவது அடுத்த ஆண்டுக்குள் இந்த மொத்த ஜிம்களும் திறக்கப்படும்