3′, ‘வை ராஜா வை’ ஆகிய படங்களை இயக்கிய ஐஸ்வர்யா தனுஷ், தற்போது முதலீட்டாளராக மாறியுள்ளார். இவர் 2016-ல் தொடங்கப்பட்ட ‘சர்வா யோகா’ நிறுவனத்தில் தற்போது முதலீடு செய்துள்ளார்.
சர்வா நிறுவனத்திற்கு பாலிவுட் பிரபலங்கள் பலர் நிதியளித்துள்ளனர், அந்த வரிசையில் மலைக்கா அரோரா, சாஹித் கபூர், பாப் நட்சத்திரம் ஜெனிபர் லோபஸ் ஆகியோர் அடங்குவர்.
சர்வா மற்றும் திவா யோகா குறித்து ஐஸ்வர்யா ஆர். தனுஷ் கூறியதாவது,, ‘தென்னிந்தியாவில் செயல்பாடுகளை அதிகரிக்க சர்வா நிறுவனம் உதவும்.
இந்த நவீன வாழ்க்கை முறையில், மன அழுத்தம், பதட்டம், மனச்சோர்வு, தூக்கமின்மை மற்றும் உடல் பருமன் ஆகியவற்றுடன் நாம் தினசரி போராடி வருகின்றோம். மலைக்கா மற்றும் சர்வேஷின், சர்வா மற்றும் திவா யோகா பணிகளை நான் பார்த்து வருகிறேன்.
ஆரோக்கியத்துடன் தொடர்புடைய எல்லாவற்றிலும் எங்கள் சிந்தனை செயல்முறைகள் எப்படி சரியாக இணைகின்றன என்பது ஆச்சரியமாக இருக்கிறது. அவர்கள் இருவருடனும் பணியாற்றுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்,
இந்த கூட்டணியின் மூலம் தென்னிந்தியாவில் சர்வா மற்றும் திவா யோகா அதிகரிக்கும் என்று நம்புகிறேன். நினைவாற்றல் மற்றும் முழுமையான ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை உலகத்திற்கு நினைவூட்ட வேண்டும், என்பது சர்வாவின் குறிக்கோள், நான் இதில் முதலீடு செய்ததற்கான காரணமும் இதுவே” என்கிறார்.